ரஷ்ய பிரபலம் 10 ஆண்டுகளுக்கு நுழைய தடைவிதித்த ஐரோப்பிய நாடு
ரஷ்யாவை விட்டு வெளியேறிய நபர் ஒருவரை தங்கள் நாட்டினுள் நுழைய லிதுவேனியா 10 ஆண்டுகள் தடைவித்துள்ளது.
ராப் பாடகர்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதையடுத்து ராப் பாடகர் Morgenshtern, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் ரஷ்யாவைவிட்டு வெளியேறினார். 
இந்த நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியா Morgenshtern தங்கள் நாட்டிற்கு நுழைய 10 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டில் உள்ள Migration அதிகாரிகள் கூறுகையில், Morgenshtern தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று லிதுவேனிய வெளியுறவு அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.
மேலும் அவர் மீதான தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாகவும், 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால், இந்த தடை குறித்து Morgenshtern இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |