உக்ரைனால் எரிபொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் பல ரஷ்யப் பிராந்தியங்கள்
More Russian regions limit fuel sales: ரஷ்யாவின் மேலும் பல பிராந்தியங்கள் எரிபொருள் விற்பனையைக் கட்டுப்படுத்துகின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் மீண்டும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மேலும் பல பிராந்தியங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனைக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ட்ரோன் தாக்குதல்களால்
தொழில்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அக்டோபர் மாத இறுதியில் இருந்து ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு 45 சதவீதமாக குறைந்துள்ளது.

ரஷ்யாவில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் குறைவது, உலகளாவிய எரிபொருள் சந்தைகளுக்கான விநியோகத்தைப் பாதிக்கக்கூடும்; மேலும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு டீசலை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றும் ரஷ்யாவின் திறனையும் இது முடக்கக்கூடும்.
ரஷ்யா பொதுவாக எரிபொருளைப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகும். ஆனால், அதிக பருவகாலத் தேவை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான முந்தைய உக்ரேனியத் தாக்குதல்களின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாகக் கோடை காலத்தில் பரவலான பற்றாக்குறை ஏற்பட்டபோது,
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய அது நிர்பந்திக்கப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்காக உக்ரைன் வகுத்த ஒரு அதி முக்கியமான உத்தியின் பகுதியாகவே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2014-ஆம் ஆண்டில் உக்ரைனிடமிருந்து ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
உக்ரைன் இந்த வாரம் நடத்திய தொடர் தாக்குதல்களால், கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தின் சாலைப் பகுதி செயலிழந்தது; அதற்கு முன்பே அங்கு எரிபொருள் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.
கிரிமியாவின் செவாஸ்டோபோல் பகுதிக்கு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மிகைல் ரஸ்வோஷாயேவ், வியாழக்கிழமை முதல் அங்குள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெட்ரோல் விற்பனை, ஒரு முழு கார் டேங்க் மற்றும் ஜெர்ரி கேன்களில் 20 லிற்றர் என மட்டுப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
அரை டசின்
மக்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான லிற்றர் எரிபொருளை கலன்களில் நிரப்புவதைத் தடுத்து, அதன்மூலம் வரிசைகள் ஏற்படுவதையும், மற்ற வாகன சாரதிகள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போவதையும் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, சைபீரிய நகரமான டாம்ஸ்க் கடந்த வாரம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை முறையே 30 லிற்றர் மற்றும் 50 லிற்றராகக் கட்டுப்படுத்தியுள்ளது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமையன்று, மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 770 கி.மீ (480 மைல்கள்) தொலைவில் உள்ள பென்சா நகரம், ஒரு வாகனத்திற்கு பெட்ரோல் விற்பனையை 50 லிற்றராகவும், டீசல் விற்பனையை 200 லிற்றராகவும் கட்டுப்படுத்தியது. இந்த மாத தொடக்கத்தில், குறைந்தது அரை டசின் பிற பிராந்தியங்கள் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.