உக்ரைனின் ஓட்டல், மளிகை கடை மீது பாய்ந்த ரஷ்ய ராக்கெட்: சிறுவன் உள்பட 51 பேருக்கு நேர்ந்த பரிதாபம்
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுவன் உள்பட 51 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதில் இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை மாற்றி மாற்றி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன், கார்கிவ் பகுதியில் மதியம் 1:15 மணியளவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
Russian missile struck an ordinary grocery store in the Kupiansk district of the Kharkiv region. This was a fully deliberate, demonstrative, and brutal terrorist attack.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) October 5, 2023
As of now, more than 51 people have been reported dead. My condolences to all those who have lost their loved… pic.twitter.com/yxIW2Xwy35
ஓட்டல் மற்றும் மளிகை கடை மீது பாய்ந்த ரஷ்ய ஏவுகணையால் 6 வயது சிறுவன் உள்பட மொத்தம் 51 பேர் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
கார்கிவ்-வின் குபியன்ஸ்க் கிராமத்தில் உள்ள ஓட்டல் மற்றும் மளிகை கடை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
AP
உயிரிழந்தவர்களின் நெருக்கமானவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நமது வான் பாதுகாப்பு, துருப்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றிக்கு ஐரோப்பிய தலைவர்களுடன் தங்கள் கவனத்தை செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |