நேட்டோ கடல்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்யக் கப்பல்... ரஷ்ய தூதருக்கு சம்மன்
நேட்டோ கடல்பரப்பில் ரஷ்யக் கப்பல் ஒன்று அனுமதியின்றி நுழைந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரஷ்யக் கப்பல் ஒன்று நேற்று அதிகாலை தனது கடல் எல்லைக்குள் நுழைந்ததாக டென்மார்க் இராணுவம் தெரிவித்துள்ளது.
பால்டிக் கடலில் அமைந்துள்ள Christiansoe தீவின் அருகில் அந்தக் கப்பல் பயணிப்பதைக் கண்ட டென்மார்க் கடற்படையினர், ரேடியோ வாயிலாக அதைத் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் திரும்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக டென்மார்க் வெளியுறவு அமைச்சரான Jeppe Kofod தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் வான் எல்லைக்குள் ஏற்கனவே ரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.