உக்ரைன் ஒயின் ஷாப்பில் போதையில் போர்த்திக்கொண்டு படுத்து கிடந்த ரஷ்ய ராணுவ வீரர்! வெளியான வீடியோ
உக்ரைன் ஒயின் ஷாப் ஒன்றில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர், புல் போதையில் போர்த்திக்கொண்டு படுத்து கிடந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 13வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, மக்களை வெளியேற்றுவதற்காக 5 உக்ரேனிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
அதேசமயம், உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள், சில பகுதிகளில் கடைகளுக்குள் நுழைந்து உணவுப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், தற்போது உக்ரைன் ஒயின் ஷாப்குள் ரஷ்ய ராணுவ வீரர், புல் போதையில் போர்த்திக்கொண்டு படுத்து கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
33 வினாடி வீடியோவில், ஒயின் ஷாப் கடைக்குள் நுழைந்த ரஷ்யா வீரர், புல்லாக குடித்து அங்கேயே போதையில் போர்த்திக்கொண்டு படுத்து கிடக்கிறார்.
அங்கு வந்த உக்ரேனியர் ஒருவர் துப்பாக்கி முனையில், படுத்து கிடக்கும் ரஷ்ய வீரரை விசாரிக்கிறார்.
Something very strange. A Russian soldier appears to have broken into a liquor store and gotten drunk. He was then captured. pic.twitter.com/VX33xAk286
— Woofers (@NotWoofers) March 8, 2022
ஆனால், அவருக்கு பதில் கூட சொல்ல முடியாமல் ரஷ்ய வீரர் போதையில் படுத்தே கிடப்பதை வீடியோ காட்டுகிறது.