தலைதெறித்து ஓடிய ரஷ்ய வீரர்... விடாமல் துரத்திய ஆளில்லா விமானம்: வைரல் வீடியோ
ரஷ்ய ராணுவ படைவீரர் ஒருவர் உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காக தலைதெறிக்க ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷ்யா பின்னகர்த்தி கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்திவருகிறது.
ரஷ்யாவின் இந்த பின்னகர்வு நடவடிக்கையை உக்ரைன் சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் தங்களது தடுப்பு தாக்குதல் உத்தியில் இருந்து முன்னேறி தாக்கும் உத்திக்கு மாறியுள்ளது.
Photos of the Russian position that was then targeted. 2/https://t.co/tgeYiIneFk pic.twitter.com/UzBA76qxcL
— Rob Lee (@RALee85) April 7, 2022
இந்தநிலையில், தற்போது உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷ்ய ராணுவ துருப்புகளை கண்டறிந்து உக்ரைனிய ராணுவம் சுட்டுத்தள்ளி அழித்து வருகின்றனர்.
அந்தவகையில், உக்ரைனுக்குள் அலைந்து கொண்டிருந்த ரஷ்யா ராணுவ துருப்பு நிலையங்களை உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்கி அழித்துள்ளது.
இந்த தாக்குதலில் அங்கிருந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் சிலர் ஓடி ஒளிந்துகொண்ட நிலையில், ஒருவர் மட்டும் உக்ரைன் ராணுவதத்தின் ஆளில்லா விமானத்திடம் மாட்டிக்கொண்டு தப்பிப்பதற்காக தலைதெறித்து ஓடும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
மேலும், உக்ரைனில் நிலைக்கொண்டு இருந்த ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவம் தனது ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.
ரஷ்யாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் மீது வண்ணப்பூச்சி ஊற்றி தாக்குதல்!