பிஞ்சு குழந்தையிடம் ரஷ்ய வீரரின் இழிவான செயல்... கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ
உக்ரைனில் பிஞ்சு குழந்தையிடம் இழிவான செயலில் ஈடுபட்ட ரஷ்ய வீரர், வீடீயோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கைதாகியுள்ளார்.
உக்ரைனில் 40 நாட்கள் கடந்தும் ரஷ்ய துருப்புகளின் அடாவடி நீடித்து வருகிறது. முக்கிய பகுதிகளில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானாலும், நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்யா படைகளை குவித்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய வீரர் ஒருவர் தமது சக வீரர்களுக்கு பகிர்ந்த காணொளி ஒன்று, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த வீடியோவால் குறித்த வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இத்தகவல் உண்மையாக இருந்தால், சமீபத்தில் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஷ்யாவின் அருவருக்கத்தக்க செயலாக இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்புடைய காணொளி மற்றும் புகைப்படங்கள் டெலிகிராம் சமூக ஊடகத்தில் குறித்த வீரரால் தமது சக வீரர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. உக்ரைன் தரப்பிலும் குறித்த சம்பவம் உறுதி செய்யப்படவே, ரஷ்யா நிர்வாகம் குறித்த வீரரை கைது செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனின் இர்பின், டைமர்கா, மரியுபோல் மற்றும் புச்சா பகுதிகளில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனமான போக்கை குறும்படமாக காண்பித்தார், அதில் மொத்தமாக எரிந்த சடலங்கள், கை கால்கள் துண்டிக்கப்பட்ட உடல்கள், சிறார்கள் உட்பட சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சடலங்கள் என பதிவாகியிருந்தது.
ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் ரஷ்ய துருப்புகளால் படுகொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், ரஷ்ய தரப்பு அதை மொத்தமாக மறுத்ததுடன், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும், மோசமான பிரச்சாரம் எனவும் குறிப்பிட்டது.
மட்டுமின்றி, புச்சா நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஒரு சிறு வன்முறை கூட அப்பகுதிகள் முன்னெடுக்கப்பவில்லை எனவும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.