போரில் ஈடுபடும் ரஷ்ய வீரர்கள் சாப்பிடும் அதிர்ச்சியளிக்கும் உணவுகள்! வீடியோ வெளியானது
உக்ரேனிய ராணுவம் ரஷ்ய வீரர்கள் சமையல் செய்யும் மற்றும் உணவு பொருட்களை வைத்துள்ள இடத்தை கைப்பற்றிய நிலையில் அவர்கள் உண்ணும் உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து 20வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தும் டிரக் லொறி ஒன்றின் உள்ளே சமையலறை போன்று வடிவைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வீரர்கள் உணவுமுறை
அந்த லொறியை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து ரஷ்ய வீரர்களின் அதிர்ச்சியளிக்கும் உணவுமுறை பழக்கம் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி அதன் உள்ளே மூட்டை மூட்டையாக உருளைக்கிழங்குகள், வெங்காயங்கள் மற்றும் ஊறுகாய்கள் மட்டுமே உள்ளது. ஏனெனில் தொடர் போரில் ஈடுபடும் வீரர்களுக்கு வெறும் இந்த உணவுகளே கொடுக்கப்படுகின்றது.
பல இடங்களில் டிராயர்கள் இருக்கும் நிலையில் அதன் உள்ளே போத்தலில் ஊறுகாய்கள் இருக்கின்றன. பல போத்தல்கள் உடைக்கப்பட்டுள்ளன, இதனால் உள்ளே உள்ள ஊறுகாய்களை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது.
மசாலா பொருட்கள்
ரஷ்ய வீரர்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படும் அடிப்படை உணவுகளில் சில வகைகளை வழங்குவதற்காக, பல்வேறு சுவையூட்டிகள் மற்றும் மசாலாப் பொருட்களால் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட்டியும் உள்ளது தெரியவந்துள்ளது.
திடீர் திருப்பம்! உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யாவிடம் ஆள்பலம் இல்லை... முக்கிய தகவல்