உக்ரேனியர்களுக்கு உதவிய ரஷ்ய வீரர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்ய வீரர்கள் உக்ரேனியர்களுக்கு உதவிய வீடியோ காட்சிகளை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கெர்சனில் உள்ள மக்களுக்கே ரஷ்ய வீரர்கள் உணவுப்பொருட்கள் அளித்து உதவியுள்ளனர்.
உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களில் கெர்சன் நகரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டதாவது, கெரச்ன் பிராந்திய நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே உள்ள சதுக்கத்தில் அந்நகர வாசிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ரஷ்ய வீரர்கள் ஏற்பாடு செய்தனர்.
கெர்சன் நகரில் உணவு வாங்க முடியாமல், மக்கள் சிலர் 2 நாட்களாக உணவு சாப்பிடாமல் இருக்கின்றனர்.
உக்ரைனில் ரஷ்ய வீரர்களால் ஏற்றப்பட்ட ரஷ்ய கொடியை கிழித்த உக்ரேனியர்! வைரல் வீடியோ
??? Russian servicemen handed over humanitarian aid to more than a thousand residents of Kherson ➡️ https://t.co/Nj9IISG2rk pic.twitter.com/nKPQUxaKzO
— Минобороны России (@mod_russia) March 30, 2022
கெர்சனில் மனிதாபிமான பேரழிவைத் தவிர்ப்பதற்காக, ரஷ்ய வீரர்கள் உள்ளூர்வாசிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தவறாமல் விநியோகித்து வழங்குகிறார்கள் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.