மரியூபோலிலிருந்து வெளியேறிய பெண்களை உள்ளாடைகளை சோதித்து அவமானப்படுத்திய ரஷ்யப் படைவீரர்கள்: கொந்தளிக்க வைக்கும் தகவல்கள்
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 156 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை ரஷ்யப் படைவீரர்கள் மோசமாக நடத்தி அவமானப்படுத்தியது குறித்த தகவல்கள் வெளியாகி கொந்தளிக்கச் செய்துள்ளன.
இரண்டு மாதங்களாக மரியூபோலிலுள்ள உருக்காலைக்குள் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைனியர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 156 பேரை ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மீட்டன.
ஆனால், இவ்வளவு நாள் பட்ட அவமானம் போதாதென, செஞ்சிலுவைச் சங்கத்தின் பேருந்துகளில் ஏறுவதற்கு முன் தேவையே இல்லாமல், பெண்களை உள்ளாடைகள் வரை சோதித்து அவமானப்படுத்தியுள்ளார்கள் ஈன குணம் படைத்த ரஷ்யப்படையினர்.
அத்துடன், மோசமான வார்த்தைகளால் உக்ரைன் பெண்களை விமர்சித்து, குற்றவாளிகளைப் போல கைரேகைகளைக் கொடுத்துவிட்டுச் செல்லும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்கள்.
உயிர் தப்பி வந்தாலும், கடைசி நிமிடம் வரை அவமானப்படுத்தப்பட்ட அந்த பெண்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும்போது, துக்கம் தாளாமல் கண்ணீர் விடும் காட்சிகள் மனதைக் கொந்தளிக்கச் செய்வதாக அமைந்துள்ளன.
அவர்கள் அந்த உருக்காலையிலிருந்தபோது சந்தித்த கஷ்டங்களோ, சொல்லி மாளாது. உணவுக்கும் தண்ணீருக்கும் கஷ்டப்பட்டது ஒரு புறம் இருக்க, கழிவறைக்குச் சென்றுவிட்டு பயன்படுத்தக்கூட தண்ணீர் இல்லாமல் தாங்கள் நீண்ட நாட்கள் அவதியுற்றதை ஒரு பெண் கூற, அவர்கள் நிலைமையை எண்ணினால் யாருக்கும் கண்களில் கண்ணீர் பெருகும்.
மரியூபோலிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த 156 பேரும் Zaporizhzhia என்ற நகரைச் சென்றடைந்துள்ளார்கள்.
பிரச்சினை என்னவென்றால், இன்னமும் நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள் அந்த உருக்காலைக்குள் பதுங்கியிருக்கிறார்கள், தொடர்ந்து ரஷ்யப்படையினர் அந்தப் பகுதியில் குண்டு மழை பொழிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்.