ரஷ்யாவில் தேச துரோகக் குற்றச்சாட்டில் விண்வெளி ஆராய்ச்சியாளர்: விசாரணை காவலுக்கு உத்தரவு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வான் இயக்கவியல் நிபுணர்
ரஷ்யாவில் வான் இயக்கவியல் நிபுணரான மாக்சிம் கிரவ்சுக், அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் கீழ் செயல்படும், மாஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான மத்திய இயந்திரக் கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

35 வயதாகும் மாக்சிம், தேச துரோகக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக Ostorozhno Novosti செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விசாரணைக்கு முந்தைய காவல்
தற்போது அவரை விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்க மாஸ்கோ நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, ஜூன் 29ஆம் திகதி அன்று மாக்சிம் தடுப்புக் காவல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாக தெரிய வந்துள்ளது.
அந்த மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 29-ஆம் திகதி நடைபெற உள்ளதாக RBC செய்தி வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |