சுற்றுலாப் பயணிகளாக... ஐரோப்பாவில் ரஷ்ய உளவாளிகள்: நிபுணர் ஒருவரின் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை சுற்றுலாப் பயணிகளாக வேடமிட்டு ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக நிபுணர் ஒருவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு வருகை
வெளியான உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், 2024ல் ஐரோப்பாவில் ரஷ்ய நாட்டவர்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், 2023 ல் சுற்றுலா விசாக்களில் 36,000 ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இதனால், பிரித்தானியாவிலும் இதே நிலை இருக்கலாம் என்று கூறுகின்றனர். உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கு இடையே நேரிடையான விமான சேவைகள் ரத்தான நிலையிலும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தேக் காணப்படுகிறது.
இவர்களின் வருகை தொழில் ரீதியாகவோ அல்லது விடுமுறையை கழிக்கவோ அல்ல என்றே பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் அந்தோணி க்ளீஸ் அம்பலப்படுத்தியுள்ளார். இது, உண்மையில் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் அரசு தரப்பில் கவலை கொள்ளாதது மர்மமாக உள்ளது என்றும் அந்தோணி க்ளீஸ் குறிப்பிட்டுள்ளார். முன்னர் சில நூறு யூரோக்கள் செலவில் இரண்டு மணி நேரத்தில் மாஸ்கோவில் இருந்து பாரிஸ் செல்லலாம்.
ஆனால் தற்போது சுமார் 2,000 டொலர் செலவிட்டு 12 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் ஐரோப்பாவுக்கு. இருப்பினும் ரஷ்யர்களின் வருகை குறையவில்லை, அதிகரித்தேக் காணபப்டுகிறது.
பிரித்தானியாவில் சாலிஸ்பரி கொலையாளிகளும் சுற்றுலா விசாவில் வந்தவர்களே என குறிப்பிட்டுள்ள க்ளீஸ், ரஷ்ய உளவுத்துறை சுற்றுலாத்துறையை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக தடுப்பதுதான்
இதனிடையே, ரஷ்யாவை வெளிநாட்டு செல்வாக்கு பதிவு திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அடுக்கில் உட்படுத்த இருப்பதாக உள்விவகார செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு, இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றே க்ளீஸ் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு ரஷ்ய சுற்றுலாப் பயணியும் புடினின் உளவாளிகள் அல்லது முகவர்களில் ஒருவராக இருக்கலாம் என்றே க்ளீஸ் தெரிவித்துள்ளார். மேலும், செய்ய வேண்டிய சரியான விடயம் என்னவென்றால், ரஷ்யர்களை பிரித்தானியாவுக்குள் நுழைவதை மொத்தமாக தடுப்பதுதான், இது ஏற்கனவே நடக்கவில்லையே என்று மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் சூழலில் இத்தாலியர்களை அல்லது நாஜிக்களை நாம் பிரித்தானியாவுக்குள் அனுமதித்திருக்கிறோமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஹீத்ரோ விமான நிலையம் மொத்தமாக 24 மணிநேரம் முடங்கியதை குறிப்பிட்டுள்ள அவர், அந்த நடவடிக்கை மொத்தமும் ரஷ்யா முன்னெடுக்கும் தாக்குதல் போலவே அமைந்துள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |