ரஷ்யாவில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் தோன்றிய இளம்பெண் செய்தியாளருக்கு நேர்ந்த கதி!
ரஷ்யாவில் அரசு தொலைக்காட்சி செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு பதாகையுடன் வந்த பெண் செய்தியாளர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட Maria Ovsyannikova என்ற செய்தி ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நேரலையில் பதாகையுடன் தோன்றினார்
அதன்படி செய்தி நேரலையின் போது திடீரென Maria உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் தோன்றினார். உக்ரைன் மீதான போர் ஒரு குற்றம் என்றும், மக்கள் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம், ரஷ்யர்களே போருக்கு எதிராக உள்ளனர் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் அவர் வந்தார்.
A woman burst onto Russia’s main live evening newscast today with a sign that says:
— max seddon (@maxseddon) March 14, 2022
“Stop the war
Don’t believe propaganda
They’re lying to you”
And chanting: “Stop the war! No to war!”pic.twitter.com/pKVKZFVEM3
மேலும் போரை நிறுத்துங்கள், போர் வேண்டாம் என்றும் அவர் கத்தினார். இதையடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பொலிசார் Mariaவை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாடிமிர் புடின் தான் பொறுப்பு
ரஷ்யாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, உக்ரைன் மீதான நாட்டின் ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக பத்திரிகையாளர்கள் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் ஒரு வீடியோவை Maria பதிவிட்டார். அதில், உக்ரைனில் நடப்பது ஒரு குற்றம். ரஷ்யா செய்யும் ஆக்கிரமிப்புக்கு பொறுப்பு விளாடிமிர் புடின் தான்.
என் தந்தை உக்ரேனியர், என் தாய் ரஷ்யர், அவர்கள் ஒருபோதும் எதிரிகள் அல்ல என கூறியுள்ளார்.