அமெரிக்க உளவு விமானத்தை விரட்டி அனுப்பிய ரஷ்ய போர் விமானம்! கருங்கடலுக்கு மேல் நடந்த சம்பவம்
ரஷ்ய எல்லையை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானத்தை தடுத்து திருப்பி அனுப்பியதாக தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டு எல்லையை நோக்கி வரும் வெளிநாட்டு விமானங்கள் ரஷ்ய போர் விமானங்கள் தடுத்து வந்த வழியே திருப்பி அனுப்பிவிடும் நிகழ்வு வழக்கமாகிவிட்டது.
அந்த வரிசையில் செவ்வாய்க்கிழமை கருங்கடலுக்கு மேல் தங்கள் எல்லையை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானத்தை தடுத்து ரஷ்ய திருப்பி அனுப்பியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், கருங்கடலுக்கு மேல் எல்லையை நோக்கி விமானம் ஒன்று வருவதை ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்ட விமானப் பாதுகாப்புப் படைகள் கண்டுபிடித்தன.
விமானத்தை அடையாளம் காணவும், அது ரஷ்ய எல்லையை மீறுவதைத் தடுக்கவும் ஒரு Su-27 ஜெட் போர் விமானம் புறப்பட்டது.
எல்லையை நோக்கி வருவது அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான RC-135 என அடையாளம் கண்ட Su-27 குழுவினர், ரஷ்ய எல்லையை மீற விடாமல் தடுத்து வந்த வழியே திருப்பி அனுப்பினர்.
வெளிநாட்டு இராணுவ விமானம் எல்லையை விட்டு விலகிச்சென்ற பிறகு, ரஷ்யாவின் Su-27 பாதுகாப்பாக அதன் விமானதளத்திற்கு திரும்பியது.
ரஷ்யாவின் Su-27 ஜெட் விமானத்தின் இந்நடவடிக்கை சர்வதேச விமானச் சட்டத்துடன் கடுமையான இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.