ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... ஒரே குண்டில் இரண்டு போர் வாகனங்களை உக்ரைன் வீரர்கள் சிதறடித்த காட்சி
ஒரே ஒரு ரஷ்ய போர் வாகனத்தைக் குறிவைத்த உக்ரைன் வீரர்கள், ஒரு குண்டு மட்டுமே செலவு செய்து, இரண்டு ரஷ்ய வாகனங்களை காலி செய்த காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் மரியூபோல் நகரில் நடைபெற்றுள்ளது.
நடந்தது என்னவென்றால், உக்ரைன் வீரர்கள், ரஷ்ய போர் வாகனம் ஒன்றைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.
தாக்குதலில் அந்த வாகனம் வெடித்துச் சிதற, அந்த ரஷ்ய வாகனத்திலிருந்து பறந்த ஒரு குண்டு, தெருவுக்கு மறுபக்கம் நின்ற மற்றொரு ரஷ்ய போர் வாகனத்தின் மீது சென்று விழ, அந்த குண்டு வெடித்ததில் இரண்டாவது போர் வாகனம் வெடித்துச் சிதறுவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
ஆக, ஒரு குண்டு செலவில், இரண்டு ரஷ்ய போர் வாகனங்களை ஒழித்துக்கட்டிவிட்டார்கள் உக்ரைன் வீரர்கள்.
ஆனாலும், அந்த ரஷ்ய வாகனங்கள் அழிக்கப்பட்டதைக் காட்டும் அதே புகைப்படத்தில், மரியூபோல் நகரம் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதையும் காண முடிகிறது.
ஆம், அங்கு தாக்குதலுக்காளாகி சேதமடைந்த கட்டிடங்களின் மிச்சங்கள் மட்டுமே பெருமளவில் காணப்படுகின்றன.
அப்பகுதியில் 90 சதவிகிதம் வரை சேதமடைந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.