கண்ணி வெடிகளில் சிக்கி தெறிக்கும் ரஷ்ய டாங்கிகள்: பரபரப்பு வீடியோ காட்சி
போரில் ரஷ்ய படைகளின் பீரங்கி டாங்கிகள் உக்ரைனிய படைகளின் கண்ணி வெடிகளில் மோதி வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பக்முட் நகரம்
ஓராண்டு நிறைவை முன்னிட்டு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர், முக்கிய கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்-ஐ தற்போது சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் முற்றுகையிடப்பட்டுள்ள பக்முட் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றினால், அவை கிழக்கு உக்ரைனுக்குள் நுழைய "திறந்த பாதை" இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Russia keeps trying to advance in the minefields near Vuhledar, Donetsk Oblast
— Euromaidan Press (@EuromaidanPress) February 28, 2023
Footage shows the Russian BMP infantry fighting vehicle of the Pacific Fleet's 155th brigade getting destroyed after hitting two mines & getting hit by an anti-tank weapon
?https://t.co/DznzDDu8Ms pic.twitter.com/I8ewZP70d5
வீடியோ காட்சிகள்
இந்நிலையில் ரஷ்யாவின் 155வது டேங்க் படைப்பிரிவைச் சேர்ந்த டாங்கிகள், உக்ரைனின் வுஹ்லேடர் என்ற நகரை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அப்போது நகரின் சிறிய சாலையில் ரஷ்ய டாங்கள் சென்று கொண்டு இருந்த போது, உக்ரைனிய படைகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடிகளில் மோதி வெடித்து சிதறியது.
டாங்கிகள் இழப்பிற்கு அனுபவமற்ற வீரர்களே காரணம் என கூறப்படும் நிலையில், வுஹ்லேடர் நகரை எவ்வளவு விலை கொடுத்தாலும் கைப்பற்ற வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார்.