வெளிநாட்டு கப்பலை தாக்கி கடலில் மூழ்கடித்த ரஷ்ய துருப்பு்கள்!
உக்ரைனின் மரியுபோல் அருகே வெளிநாட்டு சரக்கு கப்பலை ரஷ்ய படைகள் தாக்கியதாக உக்ரேனிய எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது 41வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
அதேசமயம், புச்சா நகரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால், மேற்கத்திய நாடுகள் ரஷ்ய மீது புதிய கடுமையான தடைகளை விதிக்க தயாராகி வருகின்றன.
இதனிடையே, உக்ரைனின் மரியுபோல் அருகே டொமினிகன் குடியரசுக் கொடியுடன் இருந்த சரக்குக் கப்பலை ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரியுபோல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷ்ய படைகள் குண்டு போட்டு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உக்ரேனிய எல்லை பாதுகாப்பு படை கூறியதாவது, ரஷ்யா தாக்குதலுக்கு உள்ளான கப்பல் தீப்பிடித்து அசோவ் கடலில் மூழ்கி உள்ளது.
கப்பலில் இருந்து பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக தெரிவித்த உக்ரேனிய எல்லை பாதுகாப்பு படை, ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.