உக்ரைன் மேயரை தூக்கிய ரஷ்ய படைகள்!
உக்ரைன் மேயர் ஒருவரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்றதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்நது 34வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருதற்கு மத்தியில், இரு நாட்டு பிரதிநிதிகளும் துருக்கி இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் Chernihiv-ல் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா குறைக்கும் என அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் Alexander Fomin அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மார்ச் 28ம் திகதியன்று கொர்சன் மாகாணத்தில் உள்ள Hola Prystan நகர மேயரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்றதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரபல ஐரோப்பிய நாடுகள்!
முன்னதாக ரஷ்ய துருப்புக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மற்ற மேயர்களை கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.