டாவ்ரிஸ்க் மேயரை காணவில்லை... ரஷ்ய ராணுவம் கடத்தியதா? உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்!
உக்ரைனில் கெர்சன் நகரில் உள்ள டாவ்ரிஸ்க்(Tavriysk) பகுதி மேயர் நிகோலாய் ரிசாக் ரஷ்ய படைகளால் நேற்று கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் கிட்டத்தட்ட 40 நாள்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அவர்களின் படையெடுப்பு எதிராக உக்ரைன் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டுமழைக்கு மத்தியிலும் விதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அந்தவகையில், ரஷ்ய படைகளின் படையெடுப்பை எதிர்த்து உக்ரைனின் முக்கிய நகரமான கேர்சன் பகுதி மக்களும் விதிகளில் இறங்கி போராடி வருகின்றனர், இந்த நிலையில், உக்ரைன் மக்களின் உறுதியை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் டாவ்ரிஸ்க்(Tavriysk) பகுதி மேயர் நிகோலாய் ரிசாக்சை கடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூக்கம் இல்லாத இரவுகள்... மாறும் பதுங்கு குழிகள்: உக்ரைன் ஜனாதிபதியின் கவலை நிலை
ஃபேஸ்புக்கில் இதுகுறித்து வெளியேற்றப்பட்ட டவ்ரியா நகர பிராந்திய சமூக அறிக்கையின் அடிப்படையில் Ukinform இதனை தெரிவித்துள்ளது.
அதில், ஏப்ரல் 01 திகதி மாலை முதல் டாவ்ரிஸ்க்(Tavriysk) பகுதி மேயர் நிகோலாய் ரிசாக்சை தொடர்கொள்ளவும் அவரது இருப்பிடத்தை கண்டறியவோ முடியவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் அவர் ரஷ்ய முன்வைத்த நிபந்தனைகளுக்கு எதிராக இருந்தார் மற்றும் அவர் 18,000 மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர் எனவும் தெரிவித்துள்ளது.