புடின் உத்தரவை மீற முடியாமல் விருப்பமின்றி தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள்! போரை நிறுத்த செய்யும் காரியம்
உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் தொடர்ந்து எட்டாவது நாளாக தாக்குதல் நடத்துகின்றனர். ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக அமுல் படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவால் மட்டுமே உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள், இந்த போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக தங்கள் சொந்த ராணுவ வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதும், தங்கள் கவலையை போக்கிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.