ரஷ்ய படைகள் வெளியேறுகின்றன! உக்ரைன் முக்கிய தகவல்
\ ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்-ரஷ்யா பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, உக்ரைனின் கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன் ஹெலிகாப்டர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து அவநம்பிக்கையை வெளிப்படுத்திய உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், களத்தில் தாக்குதல்கள் குறைந்ததை கண்டால் மட்டுமே நம்புவோம் என தெரிவித்தன.
இந்நிலைியல், ரஷ்ய துருப்புக்கள் வடக்கு கியேவ் பிராந்தியத்தில் இருந்து பெலாரஸ் நோக்கி ஓரளவு வெளியேறுகின்றன என உக்ரைன் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 அன்று ரஷ்யப் படைகள் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் அவர்கள் திருடிய பிற சொத்துக்களை கைவிட்டுச் செல்கின்றன என உக்ரைன் ஜெனரல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யா தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தெரிகிறது.