நீ அசிங்கமாக இருக்கிறாய்! ரஷ்ய வீரர்கள் செயலை பார்த்த பயத்தில் 17 வயது சிறுமிக்கு பக்கவாதம்... பதறவைக்கும் சம்பவம்
உக்ரைனில் ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட தாயார் மற்றும் சகோதரி உடல்களுடன் 17 வயது சிறுமி பல நாட்கள் வீட்டில் தங்கியிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் திகதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தப் போரில், இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய வீரர்களால் உக்ரைனில் உள்ள பெண்கள், சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படும் சம்பவங்களும் அதிகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இதுவரையில் நடந்த சம்பவங்களை விட கொடூரமாக நடந்த ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன்படி தனது தாயார் மற்றும் சகோதரி சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை நேரடியாக பார்த்திருக்கிறார் 17 வயதான சிறுமி ஒருவர். இருவரையும் சீரழித்து கொல்வதற்கு முன்னர் ரஷ்ய துருப்புகள் அச்சிறுமியை பார்த்து, நீ அசிங்கமாக இருக்கிறாய், அதனால் உன்னை துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் என கூறியிருக்கின்றனர்.
இருவரும் கொல்லப்பட்டதை பார்த்த அதிர்ச்சி மற்றும் பயத்தில் சிறுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதே நிலையோடு இரண்டு சடலங்களுடன் அச்சிறுமி பல நாட்கள் வீட்டில் இருந்திருக்கிறார்.
ஒரு வழியாக சமீபத்தில் அருகே உள்ள கிராமத்திற்கு தப்பி சென்றிருக்கிறார் என தெரியவந்துள்ளது.