துருப்புகளை திரும்பப் பெறுகிறோம்! உக்ரைனுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்ய முக்கிய அறிவிப்பு
உக்ரைன் உடன் பதற்றம் நிலவி வரும் நிலையில் கிரிமியாவிலிருந்து படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை மற்றும் ஆயுதங்களை குவித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
இந்நிலையில், இராணுவப் பயிற்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கிரிமியாவிலிருந்து இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் பிரிவுகள் பலவற்றைத் திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
துருப்புக்கள் Dagestan மற்றும் Chechnya-வில் உள்ள முகாம்களுக்கு திரும்பும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெறத் தொடங்குவதாக ரஷ்யா அறிவித்தது.
ஆனால் படைகளை திரும்பப் பெற்றதற்கான அறிகுறியே தெரியவில்லை என மேற்கத்திய நாடுகள் கூறிவருகின்றன.