கெர்சன் நகராக காட்டப்பட்ட உல்லாச நகரம்: போலி தகவல்களை பரப்பும் ரஷ்ய தொலைக்காட்சி!
ரஷ்ய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்ட கெர்சன் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரிவித்து அதற்கு ரஷ்யாவின் உல்லாச நகரான yeysk-வின் புகைப்படத்தை ரஷ்ய தொலைக்காட்சி பயன்படுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு பெரும்பாலான நகரங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் என அனைத்தையும் பிரங்கிகள், ஏவுகணைகள், மற்றும் போர்விமானங்கள் ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தி உருத்தெரியாமல் அழித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு உக்ரைனின் கெர்சன் நகரம் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பதாக ரஷ்ய ஆதரவு ஊடகமான ntv தெரிவித்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
மைதானத்தில் விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர்கள், குழந்தையின் வண்டியை இழுத்து செல்லும் தாய், மற்றும் திறந்திருக்கும் வணிக வளாகங்கள்,பெட்ரோல் நிலையங்கள் என உக்ரைனின் கெர்சன் நகரம் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக ntv தனது செய்திஅறிக்கையில் தெரிவித்தது.
கடந்த மாதத்தில் கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
இவற்றில் பிரச்சனை என்னவென்றால், உக்ரைனின் கெர்சன் நகரம் என தெரிவித்து ntv வெளியிட்ட புகைப்படத்தில் கெர்சன் நகரின் உண்மையான புகைபடத்திற்கு பதிலாக அவற்றில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருக்கும் ரஷ்யாவின் உல்லாச நகரான yeysk-வை பயன்படுத்தி போலியான தகவலை வழங்கியதாக கூறி பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
தீவிரமடையும் தாக்குதல்: 35வது ராணுவ தளபதியையும் இழந்த ரஷ்யா!