அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே சென்ற ரஷ்ய போர் விமானம்! கருங்கடலில் நடந்த காட்சி
கருங்கடலுக்குள் நுழைந்த அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே ரஷ்ய போர் விமானம் மின்னல் வேகத்தில் பறந்து சென்ற பரபரப்பு காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 23 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Donald Cook கப்பல் ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்தி கருங்கடலுக்குள் நுழைந்தது.
கருங்கடலில் USS Donald Cook அருகே ரஷ்யாவின் Su-24 போர் விமானம் பறந்தது வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது.
இந்த காட்சிகள் அமெரிக்க கடற்படையின் 6th Fleet அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டன.
NATO நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களுக்கு உறுதியளிப்பதற்கும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்கும் அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் இயங்குகிறது.
The @USNavy routinely operates in the Black Sea to reassure @NATO Allies & partners and ensure security & stability in the region.
— U.S. Naval Forces Europe-Africa/U.S. 6th Fleet (@USNavyEurope) January 31, 2021
Today, ?? #USSDonaldCook operating in international waters in the #BlackSea while a #Russian SU-24 does a low pass nearby.#PowerForPeace pic.twitter.com/6JGNZoncZb
இன்று, USS Donald Cook கருங்கடலின் சர்வதேச நீரில் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் ரஷ்யாவின் SU-24 போர் விமானம் அருகிலேயே குறைந்த உயரத்தில் சென்றது என அமெரிக்க கடற்படையின் 6th Fleet அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.