ஒரே ஒரு ஏவுகணை... வெடித்துச் சிதறும் ரஷ்ய போர் வாகனம்: அதிரவைக்கும் ஒரு காட்சி
ரஷ்யாவுக்குச் சொந்தமான போர் வாகனங்களை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழிக்கும் வீடியோக்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியானவண்ணம் உள்ளன.
அவ்வகையில், உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் வெடித்துச் சிதறும் ரஷ்ய tank ஒன்றைக் காட்டும் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ஏவுகணை ஒன்று தாக்கியதால் சேதமடைந்த அந்த ரஷ்ய tankஇலிருந்து பயங்கர புகை எழுவதையும், பின்னர் திடீரென அந்த tank வெடித்துச் சித்றி தீப்பிழம்பாவதையும் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் காணலாம்.
முதலில் ஏவுகணையால் அந்த tank தாக்கப்பட்ட நிலையில், அந்த வெப்பத்தில் அந்த tankகுக்குள் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததால் அந்த tank பயங்கரமாக வெடித்துச் சிதறியிருக்கலாம் என கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, வெடித்துச் சிதறியதால் துண்டு துண்டாகிக் கிடக்கும் அந்த tankஐக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
முதலில் இந்த காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், நேற்று உக்ரைன் படையினர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளார்கள்.