பிரித்தானிய கடற்கரைக்கு அருகே ரஷ்ய போர் கப்பல் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு., நடந்தது என்ன?
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே ரஷ்யாவின் Admiral Grigorovich என்ற போர்க்கப்பல், பிரிட்டிஷ் கொடியுடன் பயணித்த தனியார் படகு (Yacht) மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், Isle of Wight தீவின் தெற்கில் சுமார் 20 கடல் மைல் தொலைவில், பனிமூட்டம் சூழ்ந்த நிலையில் நடந்தது.
அந்த தனியார் படகு, ரஷ்ய கப்பலின் பாதையை கடக்க முயன்றதால் மோதல் அபாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரஷ்ய அமைச்சகம் தெரிவித்ததாவது, பலமுறை ரேடியோ தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், கப்பல் குழுவினர் சிறிய ஆயுதங்களால் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அந்த படகு திசையை மாற்றி விலகியது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்தபோது, ரஷ்ய கப்பலை Royal Navy கப்பல் கண்காணித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்
ரஷ்ய தரப்பு அளித்த விளக்கத்தின்படி, இது சர்வதேச கடல் விதிகளுக்குள் நடந்த நடவடிக்கை என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரிட்டிஷ் கமாண்டோ படையினர் ரஷ்யாவின் “shadow fleet” எண்ணெய் கப்பலை கைப்பற்றியிருந்தனர். ஆனால், இந்த சம்பவம் அதனுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை, தனித்துவமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |