உக்ரைன் நகர் ஒன்றை கைப்பற்றும் ரஷ்யப் படைகள்?: வெளியாகியுள்ள அதிரவைக்கும் காட்சி
உக்ரைனின் மரியூபோல் நகர் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் படையினரிடம் சரணடையும் காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரியூபோல் நகரின் துறைமுகத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், 1,000 உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், பதுங்கு குழி ஒன்றிலிருந்து வெளியேறும் உக்ரைன் வீரர்கள் கைகளைத் தூக்கியபடி நடக்கும் காட்சிகளைக் காணலாம்.
மரியூபோலில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் இருந்த 1,026 உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும், வேறு வழியில்லாமல் அவர்கள் சரணடையும் நிலைக்கு ஆளாகியதாகவும், அவர்களில் 162 பேர் இராணுவ அதிகாரிகள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் இந்த கூற்றை உக்ரைன் நிராகரித்துள்ளது.