ரஷ்ய தளபதியின் மனைவியை ஏமாற்றி உள்ளாடையில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்ட உக்ரைனியர்கள்...
தங்கள் நாட்டின்மீது குண்டு வீச உத்தரவிட்ட ரஷ்ய தளபதி ஒருவரை வித்தியாசமாக பழிதீர்த்துக்கொண்டுள்ளார்கள் உக்ரைனியர்கள்.
கணவர் அனுப்புவதுபோல மனைவிக்கொரு செய்தி
உக்ரைன் ஹேக்கர்கள் சிலர், ரஷ்ய தளபதி ஒருவரின் மனைவிக்கு அவரது கணவர் அனுப்புவதுபோலவே செய்திகளை அனுப்பி ஏமாற்றியுள்ளார்கள்.
பல ரஷ்ய வீரர்கள் இந்த ஏமாற்றுவேலையில் சிக்கினாலும், Colonel Sergei Atroshchenko என்பவர்தான் முக்கியமாக குறிவைக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவியான Lilia Aleksandrovna Atroshchenkoக்கு, இந்த ஹேக்கர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பி, பல புகைப்படங்களை அனுப்பக் கோரியுள்ளார்கள்.
தேசப்பற்றைக் காட்டும் வகையில் புகைப்படம் ஒன்று இருக்கவேண்டும் என்று ஹேக்கர்கள் கூறியதை நம்பி, Liliaவும் மற்ற வீரர்களின் மனைவிகளும் போர் விமானம் ஒன்றின் முன் நின்று போஸ் கொடுத்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த புகைப்படம், அதிலிருக்கும் பெண்களின் கணவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் ஆகியவற்றை ஹேக் செய்து வெளியிட்டுள்ளார்கள் அந்த ஹேக்கர்கள்.
Lilia உள்ளாடைகளில் நிற்கும் கவர்ச்சிப் படங்கள்
அடுத்த கட்டமாக, Lilia உள்ளாடைகள் மட்டும் அணிந்திருக்கும் கவர்ச்சிப் படங்களும், அவரது மொபைல் எண், அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்போர்ட் எண்ணும் வெளியாகியுள்ளன.
Lilia குறிவைக்கப்பட காரணம் என்ன?
Liliaவின் கணவரான Colonel Atroshchenko, மரியூபோலில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்த ஒரு தேவாலயத்தின் மீது குண்டு வீசுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த தேவாலயத்தின் மீது இரண்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. குழந்தைகள் இருக்கிறார்கள் என அந்த தேவாலயத்தின் வெளியே எழுதப்பட்டிருந்த நிலையிலும், அந்த தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது.
அந்த தாக்குதலில், சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காகத்தான் Colonel Atroshchenkoவின் மனைவியை ஏமாற்றி, அவரது கவர்ச்சிப்படங்களை வெளியிட்டுள்ளார்கள் உக்ரைன் ஹேக்கர்கள்.