இது எனது தாய் வீடு.., இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன் என ரஷ்ய பெண் உருக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் எல்லையில் பதற்றம் இருந்த போதிலும் இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன் என ரஷ்ய பெண் உருக்கமாக பேசியுள்ளார்.
ரஷ்ய பெண் உருக்கம்
ரஷ்யாவைச் சேர்ந்த போலினா அக்ரவால் என்ற பெண் நீண்ட காலமாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது உத்தராகண்ட் மாநிலம் குர்கானில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், ராணுவத்தையும் பாராட்டி பேசியுள்ளார்.
அவர் பேசியுள்ள வீடியோவில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக சண்டை நடந்த நேரத்தில் ரஷ்யாவுக்கு வந்துவிடுமாறு எனது பாட்டி என்னிடம் கூறினார். ஆனால், இது தான் எனது தாய் வீடு இங்குதான் இருப்பேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
இந்திய ராணுவ வீரர்கள் இரவு பகலாக எல்லையில் காத்து நின்று தேசத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அவர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் அங்கு காவல் காப்பதால் தான் மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது.
ரஷ்ய நாடு கொடுத்த நவீனமான ஆயுதங்கள், ராணுவப் பாதுகாப்புச் சாதனங்களை இந்தியா வைத்துள்ளது. எதிரி நாட்டை சமாளிக்கும் அளவுக்கு இந்திய ராணுவம் ஆயுதங்களை வைத்துள்ளது.
சுயநலமில்லாமல் நாட்டுக்காகப் போரிடும் ராணுவ வீரர்கள் நாம் பாராட்டவேண்டும். இதற்காக சிறந்த முடிவெடுத்த பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |