எவரெஸ்ட் சிகரத்தில் உக்ரேனியக் கொடியை ஏற்றிய ரஷ்ய பெண்மணி!
ரஷ்யா-உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவைச் சேர்ந்த மலையேறும் பெண் ஒருவன் எவரெஸ்ட் சிகரத்தில் உக்ரேனியக் கொடியை ஏற்றியுள்ளார்.
தனது நாட்டிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ரஷ்ய மலையேறுபவர் மற்றும் blogger ஒருவர், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் உக்ரேனியக் கொடியை ஏற்றினார்.
கத்யா லிப்கா (Katya Lipka) எனும் அந்த பெண்மணி கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 3) இன்ஸ்டாகிராமில் சில படங்களைப் பகிர்ந்துள்ளார், அவை இப்போது வைரலாகியுள்ளன.
ரஷ்ய மொழியில் உள்ள அவரது பதிவின்படி, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, மே 24 அன்று அவர் இந்த சாதனையை அடைந்தார்.
மகனின் சடலத்தை வாங்க லஞ்சம் கொடுக்கணும்., பணத்துக்காக பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்
தனது புகைப்பட பதிவிற்கு "எவரெஸ்ட் சிகரம் 8848 மீ" என்று தலைப்பிட்ட அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக, "உள்ளே ஏதோ தலைகீழாக மாறியது" என்று லிப்கா மேலும் விளக்கினார்.
நேபாளத்திற்கு வந்து 2.5 வாரங்களில், காத்மாண்டுவில் இருந்து உச்சியில் 8848 வரை. ஒரு அடிப்பட்ட காலுடன் பழக்கம் இல்லாமல் ஏறுவது எளிதானது அல்ல என்று அவர் கூறினார்.
கத்யா லிப்காவின் புகைப்படத்தை ஆஸ்திரியாவுக்கான முன்னாள் உக்ரைன் தூதர் ஓலெக்சாண்டர் ஷெர்பா ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
உக்ரைனுடன் அனுதாபம் காட்டுவதைத் தவிர, லிப்கா தற்போது விளாடிமிர் புடின் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாகவும் "Free Navalny" என்று மற்றொரு பதிவில் குரல் கொடுத்துள்ளார்.
போரை எதிர்க்கும் ஒரே ரஷ்ய பெண் இவர் அல்ல. உக்ரேனில் புடினின் "சிறப்பு இராணுவ நடவடிக்கை"யின் இந்த மூன்று மாதங்களில், பல ரஷ்ய அதிகாரிகள் ராஜினாமா உட்பட, போருக்கு எதிராக ரஷ்யா மீதான ஆதரவு மங்கி வருவதற்கான அறிகுறிகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.