காதலியை அரைகுறை ஆடையுடன் நிறுத்தி கொடுமைப்படுத்த ரசிகர்களிடம் பணம் வாங்கிய யூடியூப் பிரபலம் சிக்கலில்...
பணத்துக்காக காதலியை நேரலையில் அரைகுறை ஆடையுடன் நிறுத்திய யூடியூப் பிரபலம் ஒருவர், அந்த பெண் உயிரிழந்ததால் சிக்கலில் சிக்கியுள்ளார்.
Stanislav Reshetnikov (30) ரஷ்யாவில் ஒரு யூடியூப் பிரபலம். தனது காதலியை நேரலையில் கொடுமைப்படுத்தி அதற்காக பணம் வாங்குபவர் அவர். ஒரு நாள் Stanislavவின் காதலியான Valentina 'Valya' Grigoryevaவை (28) கொடுமைப்படுத்துவதை தான் பார்க்க விரும்புவதாகக் கூறி, ரசிகர் ஒருவர் Stanislavக்கு 1,000 டொலர்கள் கொடுத்துள்ளார்.
அதன்படி, உறைய வைக்கும் குளிரில், வெறும் உள்ளாடையுடன், கொட்டும் பனியில் Valentinaவை நிறுத்தியுள்ளார் Stanislav. ஆனால், நேரலையிலேயே விழுந்து உயிரை விட்டுவிட்டார் Valentina...
Valentina உயிரிழந்த பிறகும் Stanislav நேரலை ஒளிபரப்பை நிறுத்தவில்லை! அவர் கர்ப்பமாக வேறு இருந்ததாக கூறப்படுகிறது.
முதலில், குளிரில் நிறுத்தப்பட்டதால் Valentina ஹைப்போதெர்மியா என்ற பிரச்சினையால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், உடற்கூறு ஆய்வில், அவர் தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.
Stanislavவை விசாரித்தபோது, தான் Valentinaவை பல முறை தலையில் பலமாக தாக்கியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட Stanislavக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
யூடியூப் சேனல் நடத்துகிறோம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கொடூர செயல், மக்களிடையே, குறிப்பாக பெண்ணியவாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.