நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம்
ஆத்திரமூட்டும் செயலாக, மூன்று ரஷ்ய FSB எல்லைக் காவலர்கள் எஸ்டோனியாவில் உள்ள நேட்டோ பிரதேசத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே தங்கியிருந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வினையைச் சோதிப்பதற்கான
ரஷ்யப் போர் விமானங்கள் எஸ்டோனிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த சில வாரங்களுக்குப் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்த ரஷ்யப் பாதுகாப்புப் படையினர், நர்வா ஆற்றின் குறுக்கே ரஷ்ய மற்றும் எஸ்டோனியப் பிரதேசங்களுக்கு இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்ததாகக் கூறப்படுகிறது.
இது மேற்கத்திய பாதுகாப்புப் படைகளின் எதிர்வினையைச் சோதிப்பதற்கான ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அந்த மூவரும் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஒரு ஹோவர்கிராஃப்டில் வந்து இறங்கி, ஆற்றங்கரைத் தடுப்புச் சுவர் வழியாக நடந்தே சென்றனர்.
பின்னர் அவர்கள் தங்கள் படகிற்குத் திரும்பி, மீண்டும் ரஷ்யப் பகுதிக்குத் திரும்பினர். இந்த நிலையில், எஸ்டோனியா வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
பதிவாகியுள்ள மங்கலான காட்சிகளில் வாஸ்க்னார்வா கிராமத்திற்கு அருகே ரஷ்ய ஊடுருவல்காரர்களின் உருவங்கள் தென்படுவதாகத் தெரிவித்துள்ளது.

சம்பவம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
மேலும், எஸ்டோனிய உள்விவகார அமைச்சர் இகோர் டாரோ தெரிவிக்கையில், சட்டவிரோத எல்லைத் தாண்டிய சம்பவம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலைக் கண்டறிந்த கண்காணிப்புக் கமெராவில் பதிவான காணொளியும் எங்களிடம் உள்ளது.
மட்டுமின்றி, எஸ்டோனியாவில் ரஷ்யர்கள் சந்தேகத்திற்குரிய எதையும் புதைக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

அவர்கள் எஸ்டோனியப் பிரதேசத்தை விட்டு வெளியேறி தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டனர். தடயங்கள் கண்டறியப்பட்டன, மேலும் எதுவும் விட்டுச் செல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அந்தப் பகுதி சோதிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடுருவிய நபர்கள் ரஷ்யாவின் FSB சேவையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் எஸ்டோனியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக முன்பு விளாடிமிர் புடின் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |