ரஷ்ய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி... பதற்றத்தில் ரஷ்ய குடிமக்கள்
ரஷ்ய கரன்சியான ரூபிளின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி...
ரஷ்ய ஊடகமான Moskovskij Komsomolets என்னும் செய்தித்தாளின் முதல் பக்கத்தின் தலைப்புச் செய்தி, உருளைக்கிழங்கு விலை உயர்வால் நாட்டு மக்கள் கொந்தளிப்பு என்பதுதான்.
ரஷ்யாவில், பாணுக்கு இணையாக முக்கிய உணவாக பயன்படுத்தப்படுவது உருளைக்கிழங்கு ஆகும். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், உருளைக்கிழங்கு விலை உயர்வு தொடர்பில் நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என கோரும் அளவுக்கு அங்கு இந்த பிரச்சினை பெரிதாகியுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தை ஒப்பிடும்போது, தற்போது உருளைகிழங்கின் விலை 74 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரஷ்ய அரசின் புள்ளியியல் அமைப்பான Rosstat தெரிவித்துள்ளது.
அத்துடன், வெண்ணெய் விலையும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதால், சிலர் வெண்ணெய் திருட்டில் ஈடுபட, கடைகளில் வெண்ணெய் பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்ய உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, ரஷ்ய கரன்சியாகிய ரூபிளின் மதிப்பு வீழ்ச்சியடையத் துவங்கியுள்ளதால், மளிகை சாமான்களின் விலை அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியதையடுத்து பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. சமீபத்தில் கூட ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Gazprombank மீது அமெரிக்கா தடை விதிக்க முடிவு செய்தது.
இன்னொரு பக்கம், ரஷ்யா, போருக்காக பெரிய அளவில் செலவு செய்துவருகிறது. ராணுவத்தில் இணைவோருக்கு மிகப்பெரிய தொகை ஊதியமாக கொடுக்கப்படுகிறது.
ராணுவ தொழிற்சாலைகளில் பணி புரிவோருக்கு அதிக ஊதியம் அளிக்கப்படுவதுடன், மேலும் ஊதிய உயர்வுகள் அளிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், ரூபிளின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தாலும், ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியில் எல்லையில் இருப்பதாக தாங்கள் கருதவில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ரஷ்ய நிதி அமைச்சரான Anton Siluanovம், இந்த வாரம் ரூபிளின் மதிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு மிக மிக சாதகமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |