ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் விசா தடை ரஷ்யர்களை பாதிக்காது: ஏன் தெரியுமா?
விசா தடைகள் மூலம் ஐரோப்பா கதவுகளை மூடினாலும், ரஷ்யர்கள் மாற்று வழியை தெரிவு செய்வதாக தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யர்கள் பல நுழைவு ஷெங்கன் விசாக்களைப் பெறுவதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது. 
இந்த நடைமுறையானது ரஷ்யாவில் இறுக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் எதிர்மறையாக நடக்கிறது.
அதாவது, ரஷ்யாவின் உயரடுக்கு மக்கள் தங்களது தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கின்றனர். அவர்களுக்கு கோல்டன் பாஸ்போர்ட் மற்றும் கோல்டன் விசாக்கள் உதவுகின்றன.
ஆனால் சாதாரண ரஷ்யர்கள் தற்போது குடும்பத்தைப் பார்க்க, வெளிநாட்டில் படிக்க அல்லது விடுமுறையை எடுக்க அதிக செலவுகளையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக இவர்களின் தேர்வு மாறியுள்ளது.
அதாவது, ஐரோப்பிய நாடுகளை புறந்தள்ளிவிட்டு துருக்கி, சீனா அல்லது ரஷ்யாவுடன் இணைந்த பிற இடங்களுக்கு ரஷ்யர்கள் திரும்புகின்றனர்.
சாதாரண ரஷ்யர்களை பயணம் செய்ய அனுமதிப்பது இரு தரப்பினருக்கும் பயனளிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |