இலவச விசாவில் வரும் நாடொன்றின் சுற்றுலா பயணிகள்..தயக்கத்துடன் வரவேற்கும் ரஷ்யர்கள்
ரஷ்யாவில் விசா இல்லாமல் நுழைய அனுமதி கிடைத்த பின், சுற்றுலாவுக்கு வந்த சீன குழுவை ரஷ்யர்கள் தயக்கத்துடன் வரவேற்றனர்.
விசா அனுமதி
கடந்த மாதம் சீன நாட்டவர்கள் விசா இல்லாமல் வருகை தரலாம் என ரஷ்ய அரசு அனுமதி அளித்தது.
Yaroslav Chingaev/Moskva News Agency
ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கையெழுத்திட்ட இந்த ஆணை, சீனக் குடிமக்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு செல்ல அனுமதிக்கிறது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து வயதுடையோரையும் கொண்ட சீனக்குழு ஒன்று சுற்றுலாப் பயணக் குழுவின் ஒரு பகுதியாக தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றது. அங்கிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்ற ரயில் ஒன்றில் அவர்கள் பயணித்துள்ளனர்.
பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மீதான படையெடுப்பால் ஏற்பட்ட பல ஆண்டுகால இடையூறுகளுக்குப் பிறகு, விசா இல்லாத நுழைவு கிடைத்ததைத் தொடர்ந்து சீனாவில் இருந்து ஏராளமான பயணிகள் இவ்வாறு ரஷ்யாவிற்கு படையெடுத்துள்ளனர்.
ஆனால், அதிக செலவு செய்யும் இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை, ரஷ்யாவின் சிரமத்தில் இருக்கும் சுற்றுலாத்துறை வரவேற்கிறது.
Alexander Avilov/Moskva News Agency
அதிக மக்கள் கூட்டம்
அதே சமயம், இது கலாச்சார வேறுபாடுகள், அதிக மக்கள் கூட்டம் குறித்த கவலைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடர்பாக உள்ளூர் மக்களுடன் ஏற்கனவே இருந்த உராய்வுகளையும் மீண்டும் புதுப்பிக்கிறது.
இதற்கிடையில், ரஷ்யாவிற்கு வருகை தந்த சீன பயணிகளின் நடவடிக்கைகள் அசௌகாரியத்தை தருவதாக ரஷ்யர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
அதாவது சிலர் நாகரீகமற்று நடந்துகொள்வதாக கூறி, ரஷ்யர்கள் அவர்களை தயக்கத்துடனே வரவேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Peter Kovalev/TASS
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |