போர்க்களத்தில் இறந்தது போல் நடிக்கும் ரஷ்ய துருப்புகள்: மரண பயத்தில் தவிக்கும் நூற்றுக்கணக்கானோர்
உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ரஷ்ய மக்கள் மன உளைச்சலில் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலானோர் பயிற்சி ஏதுமின்றி வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
வலுக்கட்டாயமாக உக்ரைன் போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரஷ்ய துருப்புகளில் பல வீரர்கள் மரண பயத்தில் இறந்தது போல் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய வீரர் ஒருவரின் மனைவியே குறித்த தகவலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். ஆனால், குறித்த நபரும் அவருடன் காணப்பட்ட சிலரும் தற்போது ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
@AP
இதனிடையே, மன உளைச்சலுக்கான மருந்து விற்பனை ராக்கெட் வேகத்தில் குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ரஷ்ய மக்கள் மன உளைச்சலில் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் போருக்காக பொதுமக்களை களமிறக்க இருப்பதாக விளாடிமிர் புடின் அறிவித்த பின்னர் சுமார் 400,000 மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். மட்டுமின்றி, உக்ரைனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலர் கடுமையான சூழலை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலானோர் பயிற்சி ஏதுமின்றி வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
@getty
இருப்பினும், உக்ரைன் தொடர்பில் விளாடிமிர் புடினின் முடிவு மாறப்போவதில்லை எனவும், விளாடிமிர் புடினுக்கு மாற்றாக இன்னொருவர் ரஷ்யாவில் வரப்போவதில்லை எனவும் கூறுகின்றனர். மேலும், உக்ரைன் போர் தொடங்கி 9 மாதங்களில் இதுவரை ரஷ்ய ராணுவத்தின் இலக்கு எதுவும் எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது.