உணவு இடைவேளையின்போது மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட புடின் உத்தரவு
ரஷ்யர்கள், காபி பிரேக் மற்றும் உணவு இடைவேளையின்போது, மனைவியுடன் உடல் ரீதியான உறவுகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.
காபி பிரேக் மற்றும் உணவு இடைவேளையின்போது...
ரஷ்யா, உக்ரைன் போரில் ஏராளமான மக்களை இழந்துவிட்டது. பிறப்பு வீதமோ நாட்டில் குறைந்துகொண்டே வருகிறது.
ஆகவே, குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு ரஷ்யர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட Dr Yevgeny Shestopalov என்னும் மருத்துவர், வாழ்க்கை வேகமாக ஓடிச்செல்கிறது, ஆகவே, குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
பலர் நாளொன்றிற்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை பார்க்கும் நிலையில், அவர்கள் எப்போது தங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த Dr Yevgeny, காபி பிரேக் மற்றும் உணவு இடைவேளையின்போது மனைவியுடன் உறவு கொள்ளவேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Chelyabinsk என்னும் பிராந்தியத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளும் மாணவிகளுக்கு, முதல் குழந்தைக்கு 8,500 பவுண்டுகள் நிதி உதவி வழங்கப்படுகிறது.
அதேபோல, Karelia என்னும் பிராந்தியத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளும் இளம்பெண்களுக்கு, முதல் குழந்தைக்கு 850 பவுண்டுகள் நிதி உதவி வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் எத்தனை ரஷ்யர்கள் வாழ்ப்போகிறார்கள் என்பது முக்கியமான விடயம், அது ரஷ்யாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் விடயமாகும் என புடின் கூறியுள்ள நிலையில், Anna Kuznetsova என்னும் அரசியல்வாதி, பெண்கள் சுமார் 19 முதல் 20 வயதான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |