கெர்சனில் ஜெலென்ஸ்கியை கொல்ல முயன்ற ரஷ்யா: வெளியான வீடியோ ஆதாரம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கெர்சன் நகரத்தை நேரில் சென்று பார்த்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ரஷ்யர்கள் கொல்ல முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் நோவா ககோவ்கா அணை சேதமடைந்ததால் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே 4.8 பில்லியன் கேலன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
Kherson நகரின் பல குடியிருப்புகளின் கூரை மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு சில பகுதிகள் முற்றிலும் நீருக்கடியில் மூழ்கியது. வெள்ளத்தால் 42,000 பேர் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
UKRAINIAN PRESIDENTIAL PRESS SERVICE / AFP
இந்நிலையில், இன்று (ஜூன் 8) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கெர்சன் பகுதிக்கு வந்தார், அங்கு வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவர் அங்கு வருவார் என அறிந்த ரஷ்ய படையினர், அவரை குண்டு வீசி கொல்ல முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக இரண்டு விடியோவும் வெளியாகியுள்ளது.
Russians tried to kill Zelenskyy during his visit to Kherson
— NEXTA (@nexta_tv) June 8, 2023
On June 8, Volodymyr Zelenskyy arrived in #Kherson region, where dozens of settlements were flooded after the explosion of the #KakhovkaHPP.
The first video shows Zelenskyy standing with local residents near the… pic.twitter.com/xdbqLAuQ29
முதல் வீடியோ, மக்களை வெளியேற்றும் பணி நடந்து கொண்டிருந்த வெள்ளம் நிறைந்த தெருவுக்கு அருகில் உள்ளூர்வாசிகளுடன் ஜெலென்ஸ்கி நிற்பதைக் காட்டுகிறது. அதன்பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதியான மைகோலேக்கு உக்ரைன் ஜனாதிபதி சென்றார்.
அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, ரஷ்யா படையினர் ஜெலென்ஸ்கி இருந்த அதே தெருவில் ஷெல் குண்டுகளை வீசத் தொடங்கினர். அதற்கான வீடியோவும் வெளியாகியுள்ளது.