மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ரஷ்ய மக்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி
பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஒயின்களை ருசித்துப் பழகிய ரஷ்ய மக்கள் தற்போது உக்ரைன் போர் காரணமாக உள்ளூர் ஒயின்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 60 சதவீதம்
உக்ரைன் போருக்கு முன்னர் பிரான்சின் Burgundy மற்றும் இத்தாலியின் Barolo ஆகியவை ரஷ்ய மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டட்ட ஒயின் வகைகளாகும்.

தற்போது தடைகள் காரணமாக ரஷ்ய நுகர்வோரின் விருப்பங்கள் மாறியுள்ளது. மட்டுமின்றி, இறக்குமதி சரிவடைந்துள்ளதால் வெளிநாட்டு ஒயின்களின் விலையும் உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 25 சதவீதமாக இருந்த ரஷ்ய உள்நாட்டு ஒயின்களின் விற்பனை, தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்களின் விலையும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாஸ்கோ பல்பொருள் அங்காடிகளில், முன்னர் பிரெஞ்சு, இத்தாலி மற்றும் தென் அமெரிக்க ஒயின் வகைகள் பரவலாகக் காணப்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய, ஜார்ஜிய மற்றும் ஆர்மீனிய ஒயின்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
2014 ஆம் ஆண்டு விளாடிமிர் புடின் உக்ரைனின் கிரிமியாவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதிலிருந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது 25,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு தடைகளை விதித்துள்ளன.

இதில் பெரும்பாலான தடைகள் 2022ல் உக்ரைன் மீதான படையெடுப்பால் விதிக்கப்பட்டன. உண்மையில் கருங்கடலைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திராட்சை வளர்க்கப்பட்டு வருகிறது.
அழிவிற்கு காரணம்
ஆனால் புரட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் குறிப்பாக 1985 இல் மிகைல் கோர்பச்சேவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோவியத் மது எதிர்ப்பு பிரச்சாரங்கள், பல ரஷ்ய திராட்சைத் தோட்டங்களின் அழிவிற்கு காரணமாகின.
1991ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சில பாரம்பரிய முதலீட்டாளர்கள் தெற்கு ரஷ்யாவில் நிலங்களை வாங்கி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலிருந்து உயர்மட்ட திராட்சைத் தோட்டக்காரர்களை மீண்டும் கொண்டு வரத் தொடங்கினர்.

அதில் Côte Rocheuse நிறுவனம் 2022 முதல் ரஷ்ய ஒயின்களை விற்பனை செய்து வருவதுடன், வருடத்திற்கு 500,000 போத்தல்கள் என உற்பத்தி செய்து வருகிறது.
பெரும்பாலும் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய உபகரணங்களை நம்பியிருந்தாலும், ரஷ்ய மண் மற்றும் காலநிலையால் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான உள்ளூர் வகையைச் சேர்ந்தவை தங்களின் தயாரிப்பு என கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |