ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்! கைதட்டி கொண்டாடிய உக்ரேனியர்கள்
உக்ரைனில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷய் போர் விமானத்தை உக்ரைன் வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
Chernihiv நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. விமானம் பொதுமக்கள் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை இயக்கிய இரு விமானிகளும், அதிலிருந்து வெளியேறியுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் பலத்த காயத்துடன் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Chernihiv வான்வெளியில் விமான் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், அசுர வேகத்தில் பறக்கும் விமானம், சுடப்பட்டு தரையை நோக்கி விழ, இதை பார்த்த உக்ரேனியர்கள் கைதட்டி கொண்டாடுகின்றனர்.
#Russian plane destroyed near #Chernihiv pic.twitter.com/LfxSTjAyZP
— NEXTA (@nexta_tv) March 5, 2022
உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் திகதி முதல் போர் தொடுத்து வரும் ரஷ்யா, மார்ச் 5ம் திகதி நிலவரப்படி, 10,000 வீரர்களை இழந்துள்ளது.
அதுமட்டுமின்றி, 39 போர் விமானங்கள், 40 ஹெலிகாப்டர்கள், 269 டாங்கிகளை இழந்துள்ளது.