உக்ரைனிய நிபுணத்துவம் இல்லாமல் ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பம் வீழ்ச்சி
ரஷ்யாவின் புதிய RS-28 Sarmat (NATO: Satan II) அணு ஆயுதத் தாங்கி இடம் விட்டு இடம் பாயும் ஏவுகணை (ICBM) பயன்பாட்டிற்கு வரத் தாமதமடைகிறது என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம், 2014-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியா மற்றும் டொன்பாஸைப் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உக்ரைனிய ஆயுத தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியை இழந்ததற்கே காரணம் என Business Insider வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனிய தொழில்நுட்ப இழப்பு
உக்ரைனில் இருந்த Pivdenne Design Bureau எனும் நிறுவனம், முன்னாள் சோவியத் யூனியன் அணு ஆயுதக் கணைகளுக்குத் தேவையான திரவ எரிபொருள் இயந்திரங்களை உருவாக்கியது.
ஆனால், 2014-இல் ரஷ்யாவும் உக்ரைனும் பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுத்தியதுடன், Sarmat திட்டத்தை Makeyev State Rocket Center-க்கு மாற்றியது.
ஆனால், ரஷ்யாவிற்கு திரவ எரிபொருள் இயக்க அமைப்புகளில் அனுபவம் இல்லாததால், இந்த திட்டம் பல சிக்கல்களுக்கு உள்ளானது.
தொடர் தோல்விகள்
2015-ஆம் ஆண்டிற்குத் திட்டமிடப்பட்ட முதல் சோதனை 2017-க்குத் தள்ளப்பட்டது.
2022-ஆம் ஆண்டிலேயே ஒரே ஒரு வெற்றிகரமான சோதனை நடந்துள்ளது.
2024-இல் Plesetsk Cosmodrome பகுதியில் நடந்த சோதனையில் ஏவுகணை வெடித்துச் சிதறியது.
உண்மையான நிலை
2018-ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின், Sarmat உலகில் ஒப்பற்றது என கூறினார்.
ஆனால், தொடர்ந்த தோல்விகள் மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்ப முன்னேற்றம் நழுவியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia UKraine