சிக்ஸர் மழையில் சதம் விளாசிய வீரர்! வங்காளதேசத்திற்கு அடிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தன்ஸித் ஹசன்
செயின்ட் கிட்ஸில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வங்காளதேசம் எதிர்கொண்டது.
ICYMI: All the maximums from Sherfane Rutherford’s maiden ODI century that helped break West Indies’ 11-match losing streak against Bangladesh! 🤩#WIvBANonFanCode pic.twitter.com/SOQyelykso
— FanCode (@FanCode) December 9, 2024
முதலில் களமிறங்கிய வங்காளதேச அணியில் சவுமியா சர்கார் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லித்தன் தாஸ் (2) ஷெப்பர்ட் ஓவரில் அவுட் ஆக, அதிரடி காட்டிய தன்ஸித் ஹசன் 60 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ஷெப்பர்ட் ஓவரில் அபிப் ஹொசைன் 28 ஓட்டங்களில் வெளியேற, மஹ்முதுல்லா மற்றும் ஜாகிர் அலி இருவரும் கைகோர்த்தனர்.
இருவரின் மிரட்டலான ஆட்டத்தில் வங்காளதேச அணி 6 விக்கெட்டுக்கு 294 ஓட்டங்கள் குவித்தது. 44 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் மஹ்முதுல்லா 50 ஓட்டங்களும், ஜாகிர் அலி 40 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும் குவித்தனர்.
ரூதர்போர்டு அதிரடி சதம்
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் அணித்தலைவர் ஷாய் ஹோப், ஷெர்ஃபானே ரூதர்போர்டு கூட்டணி ருத்ரதாண்டவம் ஆடியது.
ஹோப் 88 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் குவித்த நிலையில் மிராஸ் ஓவரில் அவுட் ஆனார்.
மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரூதர்போர்டு அதிரடி சதம் அடித்தார். 80 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் விளாசினார்.
எனினும் ஜஸ்டின் கிரேவ்ஸ் 31 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்கள் இலக்கை எட்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |