திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட் - நெகிழ்ச்சிப் பதிவு!
திருமணம் குறித்து முதல்முறையாக கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சிப் பதிவு செய்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் திருமணம்
புனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் நடப்பு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக தன் விளையாட்டை வெளிப்படுத்தினார்.
இவர் கடந்த ஜூன் 3ம் தேதி தனது காதலியும், மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான உத்கர்ஷா பவார் என்பவரை கரம் பிடித்து, உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேஷ்டி சட்டை அணிந்து ருதுராஜின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
நெகிழ்ச்சிப் பதிவு
இந்நிலையில், முதல்முறையாக திருமணம் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை மக்களும், சிஎஸ்கே அணியும் என் வாழ்வில் எவ்வளவு முக்கியமான அங்கம். மகாராஷ்டிர முறைப்படி நடக்க வேண்டிய எங்கள் திருமண நிச்சயதார்த்தம், தென்னிந்திய பாரம்பரியப்படி நடக்க வேண்டும் என்று என் மனைவி உத்கர்ஷாதான் முடிவு செய்தார். அது எனக்கு ஸ்பெஷலான தருணம் என்று பதிவிட்டுள்ளார்.
Ruturaj Gaikwad did his engagement function in Tamilnadu traditional ??#WhistlePodu #IPL2023 #CSK pic.twitter.com/D4eHOXnzrX
— CSK Fans Army™ (@CSKFansArmy) June 12, 2023
The Next Poster Boy of Chennai Super Kings ?
— Junaid Khan (@JunaidKhanation) June 12, 2023
? Super King Ruturaj Gaikwad ? pic.twitter.com/ofS78it36f