ரூவாண்டாவிற்கான முதல் விமானத்திற்கு அனுமதி: பிரித்தானிய உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளை ரூவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முதல் விமான பயணத்திற்கு பிரித்தானிய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
பிரித்தானியாவில் அதிகரிக்கும் கடத்தல் குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், பிரான்ஸில் இருந்து சிறிய படகுகள் முலம் ஆபத்தான நீர்வழி ஆங்கில கால்வாய்களை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை, ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவிற்கு அனுப்பும் சர்ச்சை திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது.
இந்த திட்டமானது மிகவும் ஆபத்தானது மற்றும் பாதுகாப்பற்றது என குற்றம் சாட்டி வந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இந்த திட்டத்திற்கு எதிராக பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்ற நிலையில், சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேற முயன்ற அகதிகளை ரூவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முதல் விமான பயணத்திற்கு பிரித்தானிய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
அதனடிப்படையில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபட்ட அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவிற்கு அனுப்பும் முதல் விமானத்தை தடுக்ககோரி எதிர்பாளர்கள் முன்வைத்த தடை கோரிக்கையையும் பிரித்தானிய உயர் நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார்.
இதன்மூலம் முதல் விமான பயணத்தில் ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவிற்கு 30 மேற்பட்ட அகதிகள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவந்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனித உரிமை அமைப்புகளுக்கு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது உள்துறை அலுவலகம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மிகவும் ஆபத்தான இத்தகைய இடம்பெயர்வுகளை இந்த திட்டம் கட்டுப்படுத்தும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் அதிகரிக்கும் காலார தொற்று: அடிப்படை வசதிகள் வழங்க வழியின்றி தவிக்கும் ரஷ்யா!
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் பிரிதி படேல், "கொடிய நபர்களின் கடத்தல் வர்த்தகத்தை முறியடித்து, இறுதியில் உயிரைக் காப்பாற்றுவதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.