முத்தரப்பு டி20: நமீபியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஜிம்பாப்வே வீரர்
Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.
Windhoek-யில் நடந்து வரும் நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் அரைசதம் விளாச ஜிம்பாப்வே 195 ஓட்டங்கள் குவித்தது.
கர்ரன், பென்னெட்
முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் 38 (22) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 32 (21) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் வந்த மயேர்ஸ் (2), ரஸா (0), மதேவேரே (2) ஆகியோர் சொதப்பினர். அப்போது கைகோர்த்த ரியான் பர்ல், பிராட் எவன்ஸ் நமீபியா பந்துவீச்சை சிதறடித்தனர்.
பர்ல் சரவெடி
இந்தக் கூட்டணியின் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்ட ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.
ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), பிராட் எவன்ஸ் 25 பந்துகளில் 37 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர். எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட், ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |