முதல் சர்வதேச இரட்டை சதம் அடித்த வீரர்! விக்கெட் எடுக்க திணறும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதம் அடித்தார்.
டெம்பா பவுமா சதம்
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. மார்க்ரம் (17), வியான் முல்டர் (5), ஸ்டப்ஸ் (0) ஆகியோர் சொதப்பிய நிலையில் அணித்தலைவர் டெம்பா பவுமா (Temba Bavuma), ரியான் ரிக்கெல்டன் கூட்டணி ஸ்கோரை உயர்த்தியது.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தென் ஆப்பிரிக்கா 300 ஓட்டங்களை எட்டியது. சதம் விளாசிய பவுமா 106 ஓட்டங்களில் சல்மான் அஃஹா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இரட்டை சதம்
மறுமுனையில் ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 10வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது முதல் சர்வதேச இரட்டை சதம் ஆகும்.
மேலும் 266 பந்துகளில் எட்டி அதிவேக சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தார்.
Ryan Rickleton etches his name in the history books with a maiden Test double-hundred 💯💯
— Proteas Men (@ProteasMenCSA) January 4, 2025
Soak it all up Ryan, this is your moment!#WozaNawe #BePartOfIt #SAvPAK pic.twitter.com/8YTrEXyjdG
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |