ரூ.3,500 கோடியை போனஸாக பெறவுள்ள CEO., பிரபல விமான நிறுவனம் விதித்த ஒற்றை நிபந்தனை
ஐரோப்பாவில் மிகப்பாரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரூ.3,500 கோடியை போனஸாக பெறவுள்ளார்.
இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் CEOக்கள் கூட ஆண்டுக்கு ரூ.100 கோடியை சம்பாதிப்பது இல்லை. இங்கு மிகப்பாரிய நிறுவனத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு CEO தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவருகிறார்.
ஏனெனில் அவர் தனது நிறுவனத்தின் ஒரு நிபந்தனையை நிறைவேற்றினால் போதும் ரூ.3,500 கோடியை போனஸாக (100 Million Euros) பெறும் உரிமையைப் பெறலாம்.
யார் அந்த CEO? நிபந்தனை விதித்த அந்த நிறுவனம் எது? என்பதை பார்ப்போம்.
ஐரோப்பிய நாடான அயர்லாந்தை (Ireland) தலைமையிடமாகக் கொண்ட Ryanair Holdings Plcன் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ லியரி (Michael O’Leary) தான், அந்த ரூ.3,500 கோடியை போனஸாக வாங்க தயாராகிக்கொண்டிருக்கும் CEO.
ரூ.3,500 கோடி எப்படி கிடைக்கும்
Michael O’Learyக்கு இவ்வளவு பாரிய தொகை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். Ryanair Holdings PLC ஒரு குறைந்த கட்டண விமான நிறுவனம் ஆகும். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, நிறுவனத்தின் பங்குகள் இப்படியே தொடர்ந்து உயர்ந்தால், விரைவில் மைக்கேல் 2019-ன் நிபந்தனையின்படி ரூ.3,591 கோடியை (இலங்கை பணமதிப்பில்) போனஸாகப் பெறுவார். ஏனெனில், நிறுவனம் மைக்கேலுடன் சந்தை அடிப்படையிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு மிக அருகில் மைக்கேல்
CEO மைக்கேல் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு மிக அருகில் வந்துள்ளார். விமான நிறுவனத்தின் பங்குகள் 21 யூரோ என்ற விகிதத்தில் 28 நாட்களுக்கு இருந்தால், அவருக்கு 100 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பங்குகள் கிடைக்கும். அவருக்கு 11.12 யூரோக்கள் வீதம் 10 மில்லியன் பங்குகள் வழங்கப்படும். இந்த கனவு விரைவில் நனவாகலாம். கடந்த வெள்ளிக்கிழமை, நிறுவனத்தின் பங்குகளின் விலை 18.84 யூரோக்களை எட்டியிருந்தது.
இந்த ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 12 மாதங்களில், நிறுவனத்தின் பங்குகள் 24.10 யூரோக்களை எட்டலாம். இத்துடன் நிறுவனம் மைக்கேலுக்கு ரூ.3,591 கோடி செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு பங்கு விலை 13 யூரோக்கள். இந்த போனஸ் திட்டம் 2028 வரை உள்ளது.
போனஸ் பணம் பெற வேறு என்ன வழி?
இந்த போனஸை அடைய மைக்கேலுக்கு மற்றொரு வழி உள்ளது. இதன்படி, நிறுவனம் வரிக்குப் பிறகு 2.2 பில்லியன் யூரோக்கள் லாபம் ஈட்டினாலும், மைக்கேல் தனது போனஸ் பணத்தைப் பெறுவார்.
நவம்பரில், Ryanair இந்த ஆண்டு அதன் லாபம் 1.85 பில்லியன் முதல் 2.05 பில்லியன் யூரோக்கள் வரை இருக்கும் என்று கூறியிருந்தது.
உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
யார் இந்த மைக்கேல் ஓ லியரி?
அயர்லாந்தின் டப்ளின் நகரில் வசிப்பவர் Michael O’Leary. அவர் 1994 முதல் Ryanair-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். KPMG நிறுவனத்தில் கணக்காளராக தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் அவர் Ryanair நிறுவனர் Tony Ryanன் நிதி ஆலோசகராக ஆனார் மற்றும் 2018-ல் துணை தலைமை நிர்வாகி ஆனார். அவரிடம் பல பந்தய குதிரைகள் உள்ளன. 2018-ல் அவரது சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலர்களாக (இலங்கை பணமதிபில் சுமார் ரூ. 32,908 கோடி) மதிப்பிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Michael O’Leary, chief executive officer of Ryanair Holdings Plc, 100 million euros bonus, low-cost airline Ryanair, Ryanair CEO