கவலைப்படாதீர்கள் ரிஷி சுனக் நாங்கள் இருக்கை தருகிறோம்! வைரலான கிண்டல் புகைப்படம்
பிரித்தானிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியடைந்துள்ள நிலையில், அவரை கிண்டல் செய்யும் விதமாக Ryanair விமான நிறுவனம் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 109 ஆசனங்களை மட்டுமே பெற்று, பிரித்தானிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தோல்வியுற்றதால் லேபர் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது.
தமது கட்சியின் பின்னடைவிற்கு பொறுப்பேற்று ரிஷி சுனக், ''பிரித்தானிய மக்கள் இன்று ஒரு நிதானமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது'' என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரிஷி சுனக் தனது இடத்தை இழக்க நேரிடும் அதே வேளையில், குறைந்த கட்டண விமான நிறுவனமான Ryanair கிண்டலாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில் ரிஷி சுனக் விமான இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. அத்துடன் ''கவலைப்படாதீர்கள் ரிஷி சுனக், நாங்கள் உங்களுக்கு இருக்கை (Seat) தருகிறோம்'' என குறிப்பிட்டுள்ளது.
இந்த புகைப்படம் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் தற்போது வைரலாகியுள்ளது. பல பயனர்கள் கருத்துக்களில் இதனை கேலி செய்துள்ளனர்.
don't worry @RishiSunak we've got a seat for you pic.twitter.com/5JsrTxCqlp
— Ryanair (@Ryanair) July 4, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |