வட கொரியா வீசிய அடையாளம் தெரியாத ஏவுகணை: அவசர கூட்டத்தை கூட்டிய தென் கொரியா
South Korea Demands North Korea to Halt Missile Test: வட கொரியா ஏவுகணை சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தென் கொரியாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியா எச்சரிக்கை
வட கொரியா இடைவிடாமல் நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தென் கொரிய ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கொரியாவின் இந்த செயல்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் உடன்படிக்கைகளை மீறும் செயல் என்றும் தென் கொரியா தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் பியாங்யாங் பகுதியில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதை தொடர்ந்து இந்த கண்டனம் வெளிவந்துள்ளது.

மேலும் தென் கொரியா அவசர பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை கூட்டி நிலைமைகளை தீவிரமாக ஆய்வு செய்தது.
கிழக்கு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளை ஏவப்பட்டதை ராணுவம் கண்டறிந்த பிறகே இந்த உயர்மட்ட அவசர கூட்டம் கூடப்பட்டுள்ளது.
இந்த கூட்டதை அடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி, ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் காங் யூ-ஜங் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.